பிரஸெல்சில் நேற்று பெல்ஜியம் வாழ் இந்திய மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ஐ.நா சபையானது பயங்கரவாதம் குறித்த வரையறையை இன்னும் முடிவு செய்யாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும், அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடவடிக்கை தேவை.
பயங்கரவாதமானது மதத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். எந்த மதமும் பயங்கரவாதத்தை போதிப்பதில்லை. தீவிரவாதம் என்பது துப்பாக்கியால் மட்டும் வீழ்த்தக் கூடிய ஒன்று அல்ல. தீவிரவாதத்தை, தீவிரவாதிகளை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை சரி செய்ய வேண்டும் என்றார்.
தற்போது, பெல்ஜியத்திலிருந்து வாஷிங்டன் சென்றுள்ள மோடி, அமெரிக்காவில் இன்றும் நாளையும் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.









