இத்தாலி கண்ணாடி அணிந்த ராகுல்: அமித்ஷா தாக்கு

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளர் அமித்ஷா இன்று, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி கண்ணாடி அணிந்துகொண்டிருப்பதால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவருக்குத் தெரியவில்லை. நாட்டில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளது என்பதும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். எல்லையில் ராணுவத்தின்மீது எதிரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினால், யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பாஜக அரசுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel