2008ஆம் வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்ட KM Music Conservatory-யின் பத்தாவது ஆண்டில் அதில் பணிபுரிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர்கள் மூவரின் பாடல், 90ஆவது ஆஸ்கர் அகாதமி விழாவின் ஒரிஜினல் சவுண்டு டிராக் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 90ஆவது ஆஸ்கர் அகாடமி விழாவுக்கான ஒரிஜினல் சவுண்டு டிராக் பட்டியலுக்கான 70 பாடல்களை ரிலீஸ் செய்தது அகாடமி தேர்வாளர்கள் குழு. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் KM Music Conservatory-யில் இசை பயின்ற மாணவர்கள் உருவாக்கிய Qutub-e- Kripaa என்ற குழு இசையமைத்த ‘Lake Of Fire’ திரைப்படத்தின் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
Jerry Silvester Vincent இசையமைத்த “Have you Ever Wondered”, A.H. Kaashif இசையமைத்த “I ‘ll be Gone” மற்றும் N. D Santhosh இசையமைத்த “We’ll Party All Night” ஆகிய பாடல்கள் ஆஸ்கர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கின்றன. ராஜ் திருசெல்வன் இயக்கத்தில் OMantra ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் Qutub-e- Kripaa அமைப்பும் சேர்ந்து தயாரித்திருக்கும் Lake Of Fire திரைப்படத்திலுள்ள ஐந்து பாடல்களில் மூன்று பாடல்கள் ஆஸ்கர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன. மலையாளத்தில் மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காடனயும் கால்சிலம்பே’ மற்றும் ‘மானத்தே மறிக்குரும்பே’ஆகிய இரண்டு பாடல்களும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன.
70 பாடல்கள் கொண்ட பட்டியலில் இந்தியாவிலிருந்து ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஆஸ்கர் அகாடமியோ மொத்தமே ஐந்து பாடல்களைத்தான் இறுதியாக தேர்வு செய்து ஆஸ்கர் விழாவின்போது, அதிலிருந்து ஒன்றை விருதுக்குத் தேர்வு செய்யும்.









