திருவனந்தபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் பிஜூ ரமேஷ். சாராய வியாபாரியான இவர் திருவனந்தபுரம் போர்ட் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கால்வாயை ஆக்கிரமித்து ஹோட்டல் கட்டியுள்ளார். மத்திய அரசின் பேரிடர் தடுப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ‘ஆபரேஷன் அனந்தா’ தீவிர நடவடிக்கைக் குழுவினர் இதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ரமேஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றத்தின் தனிநபர் அமர்வு ஹோட்டலை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து இரண்டு நீதிபதி அமர்வில் மேலுமுறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதி அமர்வு ஓட்டலை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரின் ஆக்ரமிப்பு ஹோட்டலை இடிக்க உத்தரவு
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








