அதிமுக, திமுக ஊழல் சொத்துகளை ஏலம் விடுவோம்: வைகோ

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக-வின் அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெறப் போகிறது. பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெறுவோம். தமிழகத்தில் ஊழலை ஒழித்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதிமுக, திமுக ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்து மக்கள் மன்றத்தில் ஏலம்விடுவோம். விவசாயிகள் 5ம் தேதி நடத்துகிற போராட்டத்துக்கு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஆதரவு அளிக்கும். ஏப்ரல் 10ம் தேதி தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மாநாடு செங்கல்பட்டு அருகே உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். அப்போது கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel