அதிமுக அரசுக்கு, கடந்த சில ஆண்டுகளாக ஆதரவு அளித்துவந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை, எந்தத் தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதையடுத்து மேற்கொள்ளவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து, சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் வேல்முருகன், ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேல்முருகன், ‘தேர்தலில் போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அதிமுக வாய்ப்பு வழங்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது’ என தெரிவித்தார். எனவே, அதிமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக கூறிய வேல்முருகன்,
‘அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 12-ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்’ என்றார்.









