திமுக பொருளாளர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் திட்டக்குடி வேட்பாளர் வெ.கணேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக-வின் தேர்தல் அறிக்கை மக்களுடைய பொக்கிஷம். அதிமுக ஆட்சியில் சொந்தக் கட்சியினருக்கு மட்டுமே முதியோர் நிதி வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்டம்தோறும், முதியவர்களுக்காக காப்பகங்கள் அமைக்கப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். பேரிடர்களின்போது அதிமுக என்ன செய்தது? மழை வெள்ளத்தின்போது மக்களை ஜெயலலிதா சந்திக்கவில்லை. பர்கூரில் ஜெ. தோல்வியடைந்ததுபோல், ஆர்.கே.நகரிலும் ஜெயலலிதா தோல்வியடைவார். என்னை நம்புங்கள் நான் சொன்னால் நடக்கும். நமக்கு நாமே பயணத்தின்போது அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். மக்களின் குறைகளை நிவர்த்திசெய்யும்வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆணவ ஆட்சியை அகற்றி, கலைஞரை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவதற்கு எல்லோரும் உறுதியேற்போம். அதற்கு கலைஞர் உங்களுக்கு அளித்த வேட்பாளர் கணேசனை வெற்றியடையச் செய்யவேண்டும்” என்று பேசினார்.,”
ஜெ.தோற்பார்! நான் சொன்னால் நடக்கும்!: ஸ்டாலின்
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
