மஹாராஷ்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான பாஜக எம்பி, பங்கஜா முண்டே, மஹாராஷ்டிர மாநிலத்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான லத்தூரில் எடுத்துக்கொண்ட செல்ஃபி, சமூக வலைதளத்தில் பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளன. காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ப்ரியங்கா சதுர்வேதி, ‘பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் செய்திருக்கும் இத்தகைய செயல், பாஜக அரசின் பொறுப்பற்றத்தன்மைக்கு ஒரு சான்றாகும்’ என்று கூறியுள்ளார். பெண்ணுரிமை செயற்பாட்டாளர் அபா சிங், ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் மனோஜ் ஜா மற்றும் பலர் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ‘இரண்டு நாட்களுக்கு முன்பு, மக்களின் குடிநீர்த் தேவையை காரணமாக வைத்து சாராய ஆலைகளுக்குத் தண்ணீரை நிறுத்தக்கூடாது’ என்று அவர் தெரிவித்த கருத்தும் கண்டனங்களுக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
வறட்சி: செல்ஃபி எடுத்த பாஜக எம்பி
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








