பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யும் தேதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் ஏப்ரல் 21 அன்று சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். ஏப்ரல் 22 அன்று வேலூரிலும், ஏப்ரல் 23ல் சேலத்திலும், ஏப்ரல் 24ம் தேதி கோவையிலும், ஏப்ரல் 25ம் தேதி தர்மபுரியிலும்,
ஏப்ரல் 26ம் தேதி சிதம்பரத்திலும், ஏப்ரல் 27ம் தேதி திருச்சியிலும் பிரச்சாரம் செய்கிறார். வரும் ஏப்ரல் 28ம் தேதி திண்டுக்கல் மற்றும் ஏப்ரல் 29 அன்று விருதுநகரிலும் பிரச்சாரம் செய்வார் என பாமக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









