சென்னையில் நான்கு ரவுடிகள் கைது!

By Balaji

|

Published on 11 Feb 2018, 12:00 AM

சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது பினு கூட்டாளிகள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து ஆகிய வழக்குகளில் ரவுடி பினு, கனகு உள்ளிட்டோர் தேடப்பட்டு வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து சுமார் 76 ரவுடிகளைக் கைது செய்தனர். இருப்பினும் பினு மற்றும் அவரது கூட்டாளிகளும் தப்பி ஓடிவிட்டனர். பினு மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ரவுடி பினுவைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடிவருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து ரவடிகளையும் கைது செய்ய திட்டமிட்டுத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதன்படி இன்று நான்கு ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சூளைமேடு பகுதியில் பதுங்கியிருந்த பினுவின் கூட்டாளி வினோத், அரும்பாக்கத்தில் பதுங்கியிருந்த பினுவின் மற்றொரு கூட்டாளி ஸ்கெட்ச் அலாவுதீன், பினுவின் எதிர்முகாமைச் சேர்ந்த ரவுடி ராதாவின் கூட்டாளிகளான குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel