மதிமுகவினர் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். MDMK Vaiko
சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம், பூவிருந்தவல்லியில் நேற்று ஜூலை 10-ந் தேதி நடைபெற்றது.
இதில் பேசிய வைகோ, நமது இயக்கத்தை குறிவைத்து தாக்குகின்றனர். மதிமுக காணாமல் போய்விட்டது; வைகோவின் அரசியல் முடிந்துவிட்டது என நினைக்கின்றனர்.
மதிமுகவின் எதிரிகள், துரோகிகளுடன் மல்லை சத்யா இணைந்து கொண்டு செயல்படுகிறார்; நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் ஒரு முறை என் உயிரை காப்பாற்றினார் மல்லை சத்யா. ஆனால் 3 முறை என்கிறார். மற்ற 2 முறை எங்கே என்பதை மல்லை சத்யா சொல்ல வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கும். திமுக கூட்டணியின் வெற்றிக்காக மதிமுகவினர் பாடுபட வேண்டும் என்பது என் கட்டளை. இவ்வாறு வைகோ கூறினார்.
