திருமாவளவன் ஆதரவு- முதல்வராகிறார் விஜய்

Published On:

| By Mathi

VCK Vijay Thirumavalavan New

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தர இருக்கிறது. இதற்கான அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட இருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றது. இதில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். இதனால் தவெக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107. 234 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கொண்ட சபாநாயகர் தவிர்த்து, சட்டசபையின் பலம் 233.

ADVERTISEMENT

இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள். விஜய்க்கு இதுவரை காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஎம் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விஜய்க்கு மொத்தம் 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்நிலையில் 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தமது ஆதரவை விஜய்க்கு தெரிவிக்க இருக்கிறது. இதனால் விஜய்க்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 118 ஆக உயரும். மெஜாரிட்டிக்கான 117 ஐவிட 1 எம்.எல்.ஏ. கூடுதலாகவே விஜய்க்கு கிடைக்கும்.

ADVERTISEMENT

இதனால் விஜய்யை ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். இந்த அழைப்பின் அடிப்படையில் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share