விசிகவின் முடிவு என்ன? மாலை 4 மணிக்கு அறிவிக்கும் திருமாவளவன்

Published On:

| By Mathi

VCK Thirumavalavan Press Meet

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தருவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவிக்க இருக்கிறார்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் தவெக தலைவர் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதனால் ஆளுநர் அர்லேகர், விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

ADVERTISEMENT

தாம் ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனிடம் விஜய் கேட்டிருந்தார். இதனடிப்படையில் விசிகவின் உயர்நிலைக் கூட்டத்தை திருமாவளவன் நேற்று மாலை நடத்தி இருந்தார்.

இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் இன்று காலை திருமாவளவன் தமது முடிவை அறிவிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தமது முடிவை அறிவிக்க இருப்பதாக விசிக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share