அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் பேரம் பேசிய தவெக தலைவர் விஜய்யை சும்மா விட்டுவிடமாட்டேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:
- அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்திடுவதாக தவெக வெளியிட்ட வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது.
- காமராஜ் கையெழுத்திடும் வீடியோ உண்மை எனில் அந்த ஒரிஜினல் வீடியோ எங்கே?
- காமராஜ் காரில் கையெழுத்திடுகிறார் எனில் அவரை வீடியோ எடுத்தது விஜய்யா? ஆதவ் அர்ஜூனா? சிடி நிர்மல்குமாரா? செங்கோட்டையனா?
- முதலமைச்சராவதற்கே இத்தனை போர்ஜரி, 420 வேலை செய்கிறீர்கள்.. ஆட்சி அதிகாரம் வருவதற்கு முன்னரே இத்தனை திமிரா, அகம்பாவமாக செயல்படுகிறார் விஜய்..
- விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேரழிவு.
- காமராஜ் எம்.எல்.ஏ. கையெழுத்திட்டு கடிதம் கொடுத்திருக்கிறார் எனில் அந்த ஒரிஜினல் கடிதத்தை விஜய் வெளியிடுவாரா?
- காமராஜ் எம்.எல்.ஏ.விடம் கையெழுத்து வாங்கி இருந்தால் அவரை மிரட்டி – குதிரை பேரம் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்க வைக்கலாம் என திட்டமிட்டிருந்தனர்.
- இந்த போர்ஜரி கடிதம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.
- காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலம் இருந்ததால் அவர்களைப் போல விஜய்க்கு இடதுசாரிகள் ஆதரவு தந்துவிட்டனர்.
- விஜய் கொடுத்திருக்கும் அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அர்லேகர் ஆராய வேண்டும்.
- ஜனநாயகத்தில் ஆதரவை தாருங்கள் என தலைவர்களிடம் நேரில் கேட்க வேண்டுமே தவிர போர்ஜரி கடிதங்கள் மூலம் ஆதரவை உருவாக்கக் கூடாது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
