விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

Published On:

| By Mathi

Vijay Supreme Court

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்- , வழக்கறிஞரான எழிலரசி மற்றும் முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த மனுக்களில்

  • 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டசபையில் 108 இடங்களைப் பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
  • காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு அக்கட்சியின் பலம் 113 ஆக உள்ளது.
  • அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிப்பெரும் கட்சியின் தலைவரையே ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
  • ஒரு கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக்கூடாது. அதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உள்ளன
  • ஆகையால் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் அர்லேகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share