மதிமுக குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. (A.Raja) கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ (Durai Vaiko) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இன்று ஜூன் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய ஆ.ராசா திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை விமர்சித்தார்.
மேலும், “நேற்று சென்னையிலிருந்து வந்துவிட்டோம். அப்போது, “மீண்டும் வருவோம், மீண்டும் வருவோம் தலைவா!”- இது கட்சிக்காரர்களின் பேச்சு.
தாய்மார்கள் வருகிறார்கள்.. ”தலைவா நாங்கள் இருக்கிறோம்! உங்களைக் காப்பது, கோட்டையில் உட்கார வைப்பதுதான் எங்கள் வேலை!” என்கின்றனர்.
இன்னொருவர்.. “தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன ஆயிற்று, வெட்கமாய் இருக்கிறது” என்கிறார்.
இன்னொரு தாய், “கையில் ஒரு குழந்தைவையை வைத்துக் கொண்டு, ”உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் தலைவா! தமிழ்நாடு உங்களை நம்பி இருக்கிறது” என்கிறார்.
இன்னொருவர் (வைகோ) பொதுக் குழுவை கூட்டுகிறோம் என்கிறார்.. “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா?” என்பதை .. அப்படியே ஜனத்திரள் சமுதாயம் கூடுதாம்.. அவங்க போனால் 1 லட்சம் பேர் கூடுவாங்களாம்.. மொத்த கட்சியுமே அங்கே அவ்வளவுதான் இருக்கு.. அவங்க சொல்றாங்களாம்.. நாங்க கூட்டணி பற்றி முடிவு செய்ய போகிறோம் என்கிறார்கள்… என்ன செய்ய போகிறீர்கள்? இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
கொந்தளித்த துரை வைகோ (A RAJA VS DURAI VAIKO)
ஆ.ராசாவின் இந்த பேச்சு குறித்து தென்காசியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.யிடம் கேள்வி கேட்டனர். அதற்கு, “அதை கொஞ்சம் விரிவாக பேச வேண்டும். ஒரு வரியில் பேச முடியாது.. நாகரிகம் இல்லாத கருத்து. அரசியல் எல்லைகளைக் கடந்து கண்டிக்கிறேன்”
