300 புதிய பேருந்துகள் தொடக்கம்: பேருந்தில் ஏறி சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் விஜய்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட ஆறு கோட்டங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25) தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து முதல்வர் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த அவர், நடத்துனரிடம் உரிய கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டார். பேருந்து பயணத்தின் போது சக பயணிகளுடனும், பொதுமக்களுடனும் தனது செல்போனில் செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டார். மேலும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கலந்துரையாடினார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட அந்தப் பேருந்திலேயே கலங்கரை விளக்கம் வரை சென்ற முதல்வர் விஜய், பின்னர் அதே பேருந்திலேயே மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share