திமுகவுக்கு கூட்டணியே தேவை இல்லை என்பது தொடர்பாக விரைவில் பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இன்று ஜூன் 25-ந் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எப்பொழுதுமே கலைஞர் அவர்கள் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவங்களாகப் போனால் தான் போறாரே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது.
அதே மாதிரிதான் நானும் அவர் வழியில் நின்று நான் எந்த கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன், ஆனால் அவர்களாகப் போனால் அதற்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை.
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் கூட்டணியே தேவையில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்.. பரிசீலிப்போம்.. பரிசீலிப்போம்.. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
