உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம் (TAPS) மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 5000 கோடி கூடுதல் தொடர் செலவினம் ஏற்படுகிறது என்று தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
இன்று ஜூன் 16 தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட அவர், புதிய திட்டங்களை கடன் வாங்காமல் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் செலவாகிறது. மூலதன செலவினத்தை விட கடன் அளவு இரட்டிப்பு வேகத்தில் அதிகரிக்கிறது என்று கூறினார்.
பின்னர் இது தொடர்பாக நிதியமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
’தமிழ்நாடு உறுதி அளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், ஒவ்வொரு வருஷமும் 5000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அதோட அதுவே ஒவ்வொரு வருஷத்துக்கும் 10% எக்ஸ்ட்ரா ஆகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள்.
இப்போது புது கவர்மெண்ட் வந்ததுக்கு அப்புறமும், அந்த உறுதி அளிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடருமா? இல்லை தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?’ என்ற கேள்விக்கு,
”மிக விரைவில் முடிவு செய்வோம். முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு போவோம். அவரோட அறிவுறுத்தலின்படி முடிவெடுப்போம்” என்று கூறினார்.
