தமிழகத்தின் நிதி நிலை வெள்ளை அறிக்கை: உண்மையான கடன் எவ்வளவு? தனிநபர் மீதான கடன் எவ்வளவு? முக்கிய அம்சங்கள் என்ன?- முழு விவரம்!

Published On:

| By Mathi

Tamil Nadu Govt Releases White Paper on State Finances

தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை (White Paper) நிதி அமைச்சர் மரியவில்சன் இன்று (ஜூன் 16) வெளியிட்டார்.

நிதிநிலை வெள்ளை அறிக்கையின் (WHITE PAPER) முக்கிய அம்சங்கள்:

ADVERTISEMENT
  • மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் ₹10 இலட்சம் கோடி ரூபாய்
  • இந்த கடன், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28.3% ஆகும்
  • வருவாய்ப் பற்றாக்குறை ₹78,324 கோடி ரூபாய். இது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சமாகும்
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR/GSDP) வெறும் 5.45% மட்டுமே.
    இது மிகக் குறைந்த அளவாகும்.
  • மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8% ஆகும்.
  • தவிர்க்க இயலாத செலவினங்களின் சதவீதம் 64.4% ஆகும்.
  • உண்மையான மொத்த கடனளவு ₹13.18 இலட்சம் கோடி ரூபாய். இந்த உண்மையான கடனளவில் அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளும் அடங்கும்.
  • கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ₹4.87 லட்சம் கோடி புதிய கடன் சேர்க்கப்பட்டுள்ளது.
  • சுதந்திரத்திற்குப் பின் முதல் 60 ஆண்டுகளில் சேர்த்த கடனை விட இந்த 5 ஆண்டுகளில் சேர்ந்த கடன் அதிகம்.
  • கடன் ஆண்டுக்குச் சராசரியாக 14.3% வளர்ந்து வருகிறது.
  • ஆனால் மூலதன முதலீடு வெறும் 8.3% மட்டுமே வளர்ந்துள்ளது.
  • ஒருவருக்கான கடன் பொறுப்பு ₹1,28,934 ஆக உயர்ந்துள்ளது.
  • மின்வாரியக் குழுமத்தின் குவிந்த இழப்பு ₹1,82,361 கோடி ரூபாய்.
  • மின்வாரியத்தின் கடன் ₹2,47,130 கோடி ரூபாய்.
  • மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி உதவி ₹16,000 கோடி ரூபாய். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செலுத்த வேண்டிய கட்டாயத் தொகை ₹11,800 கோடி ரூபாய்.
  • போக்குவரத்து கழகங்களின் மொத்த இழப்பு ₹72,607 கோடி ரூபாய்.
  • பேருந்து இயக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ₹78.81 செலவாகிறது.
  • ஆனால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கிடைக்கும் வருவாய் வெறும் ₹25 மட்டுமே.
  • நுகர்பொருள் வணிகக் கழகத்தின் மூலதனக் கடன் ₹27,181 கோடி ரூபாய்.
  • அரசு உத்தரவாதப் பொறுப்புகள் (Guarantees) ₹1,79,782 கோடியாக உயர்ந்துள்ளது.
  • வருவாய்ப் பற்றாக்குறை உண்மையான நிலையை விட சுமார் 79% குறைவாகவே பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது.
  • 2026-27 நிதி ஆண்டிற்கான உண்மையான நிதி பற்றாக்குறை சுமார் ₹1,52,144 கோடியாக இருக்கும்.
  • வருவாய் வரவில் 64% க்கும் மேல் சம்பளம், பென்ஷன் மற்றும் வட்டிக்கே செலவாகிறது.
  • 2031-ஆம் ஆண்டில் முதியோர் மக்கள் தொகை பங்கு 18.2% ஆக உயரும்.
  • வருமானம் ஈட்டுபவர்களை விட சார்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • வட்டி செலவு மட்டும் ஆண்டுக்கு ₹67,050 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • புதிய நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரம் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலமே உருவாக்கப்படும்.
  • வணிக வரி, முத்திரைத்தாள், சுரங்கத் துறைகளில் வருவாய் கசிவு உள்ளது.
  • 2017-ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. (GST) இழப்பீடு திட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
  • இருந்தபோதிலும், அதற்கான மாற்றங்களைச் செய்ய அரசு தவறிவிட்டது.
  • அரசு உத்தரவாதக் கடன்களுக்கான வட்டி செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
  • மின்வாரியத்தின் கடன் நிர்வாகம் ஒரு பெரிய நிதி சுமையாக உள்ளது.
  • பொதுத்துறை நிறுவனங்களின் இழப்புகள் இறுதியாக அரசின் நிதிச் சுமையாக மாறுகிறது.
  • பொருளாதாரச் சிக்கலை ஒப்புக்கொள்வது அதைச் சரிசெய்வதற்கான முதல் படியாகும்.
  • வருவாய் உயர்வை விட கடனின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
  • உள் கட்டமைப்பு முதலீடுகளை விட நுகர்வுக்கே அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
  • முந்தைய காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட இலவசங்கள் மற்றும் மானியங்கள் நிதி நிலையை பாதித்துள்ளது.
  • அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை ஆண்டுக்கு ₹5,000 கோடி வீதம் உயர்கிறது.
  • போக்குவரத்து கழகங்களில் மட்டுமே பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
  • நிதி சிக்கல்களைச் சமாளிக்க நிர்வாகத் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை அவசியமாகும்.
  • கூடுதல் வரிச் சுமை இன்றி வருவாயை அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.
  • ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும், சுமார் 64 ரூபாய் நிர்வாக செலவுகளுக்கு மட்டுமே செல்கிறது.
  • அரசு கடன் சுமை குறையாத நிலையில், வட்டி விகிதங்கள் தொடர்ந்து அழுத்தத்தை தருகின்றன.
  • மூலதன முதலீடுகள் மந்தமானதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
  • மின்வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்கள் நீண்டகால சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றன.
  • இந்த நிதி நிலையை மீட்டெடுக்க உடனடி நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மொத்த நிலுவைக் கடன் ₹10 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 28.3% ஆகும்.
  • வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக, வருவாய்ப் பற்றாக்குறை ₹78,324 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR/GSDP) மிகக் குறைந்த அளவாக 5.45% எனப் பதிவாகியுள்ளது.
  • மொத்த வருவாய் வரவுகளில் 22.8% வட்டிச் செலவினங்களுக்கே செலவிடப்படுகிறது.
  • பொறுப்பேற்ற அல்லது தவிர்க்க இயலாத செலவினங்கள் 64.4% ஆக அதிகரித்துள்ளன.
  • அரசு பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கிய உண்மையான கடனளவு ₹13.18 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • புதிய வரிகளை விதிக்காமல், நிர்வாகத்தைச் சீரமைப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • வணிக வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் சுரங்கத் துறையில் உள்ள வருவாய் கசிவுகளைத் தடுத்தல்
  • பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைத்தல் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்தல்
  • செலவினங்களை நுகர்வு நோக்கிலிருந்து மூலதன முதலீடு நோக்கிற்கு மாற்றுதல்.மின்வாரியத்துக்கான கடன் ரூ2.47 லட்சம் கோடி
  • சொந்த வரி வசூல் திறன் கடுமையாக சரிந்துள்ளது
  • நலத்திட்டங்கள் தொடரவே செய்யும்; அதற்கு தேவையான வருவாய் ஆதாரங்கள் உருவாக்கப்படும்.
  • ரூ25,000 கோடி செலவாகும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
  • நிர்வாக சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டன
  • ஜிஎஸ்டிக்குப் பின் மூலதன செலவு குறைந்துவிட்டது
  • சொத்துப் பதிவில் வருவாய் குறைவு; முத்திரைத்தாள் கட்டணம் குறைவு
  • மத்திய அரசின் நிதிப் பகிர்வு 4.09%ஆக குறைந்துவிட்டது
  • 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ரூ.5 லட்சத்தில் கோடியில் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்தது
  • தமிழகத்தின் உண்மையான கடன் அளவு ரூ13.18 லட்சம் கோடி
  • தமிழகத்தின் நிலுவைக் கடன் சதவீதம் குறைந்துள்ளது; மாநில ஜிடிபியில் 28.7%-ல் இருந்து 28.3% ஆக குறைந்துள்ளது.
  • வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக குறைந்துள்ளது.
  • வட்டி, சம்பளம், ஓய்வூதியத்துக்கு 64% நிதி செலவிடப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் மீதான கடன் ரூ1.28 லட்சம்
  • வட்டி செலவினத்தால் மூலதன செலவு குறைகிறது

நிதி நிலை வெள்ளை அறிக்கை முழுமையாக (WHITE PAPER)

நிதி நிலை வெள்ளை அறிக்கை முழுமையாக (PDF)

வீடியோ:

🔴LIVE: தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை வெளியீடு நேரலை  | White Paper LIVE | Maria Wilson |  TN Govt

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share