வருங்கால வைப்பு நிதி (PF) என்பது சம்பளம் பெறும் நபர்களுக்கு ஒரு பெரிய ஆதரவாகும். அவசர காலங்களில் PF பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, ஆன்லைனில் PF நிதியை எடுக்க 7 முதல் 10 நாட்கள் ஆகிறது. ஆனால் இப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களை, UPI கட்டணச் செயலி மூலம் நேரடியாகத் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
EPFO 3.0 திட்டம் PF தொடர்பான சேவைகளை வேகமாகவும், எளிதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் ஆகும். இது தானியங்கித் தீர்வு மற்றும் உடனடிப் பரிவர்த்தனைகள் போன்ற அம்சங்களை வழங்கும். முன்பு PF பணத்தை எடுக்க 7 முதல் 20 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது இந்தச் செயல்முறையை சில நிமிடங்களுக்குள் முடிக்க முடியும்.
மே 1 முதல் UPI மூலம் PF நிதியை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் EPFO இதுவரை அத்தகைய அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிடவில்லை. ஆனாலும், இபிஎஃப்ஓ இந்த அம்சத்திற்காக நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறது. மே 1 அன்று இல்லாவிட்டாலும் மே மாதம் முடிவதற்குள் புதிய விதி செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை உங்களுக்கு அவசர பணத் தேவை பெரிய அளவில் ஏற்பட்டால் நீங்கள் PF பணத்தை எடுக்கலாம். மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்கு உங்கள் PF பணத்தை எடுக்கலாம். வீடு வாங்குவதற்கோ அல்லது வீட்டைப் புதுப்பிப்பதற்கோ நீங்கள் PF பணத்தை எடுக்கலாம்.










