ப்ரிட்ஜை திறந்தவுடன் துர்நாற்றம் வீசுகிறதா?… எப்படி சுத்தம் செய்வது? இதோ சூப்பர் டிப்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Why does  refrigerator smell How to clean and keep fresh tips

குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் (Refrigerator Smell) வீசுவது ஏன்? அதனை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை குளிர்சாதனப் பெட்டி என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீதமுள்ள உணவுகளைச் சேமித்து வைக்க குளிர்சாதன பெட்டி பயன்படுகிறது. இதனால் நம்முடைய சமையல் எளிதாவதோடு காய்கறிகளை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்த முடிகிறது. ஆனால், சில சமயங்களில் சுத்தம் செய்த பிறகும் கூட குளிர்சாதனப் பெட்டி உள்ளே இருந்து ஒரு வினோத (fridge bad smell) வாசனை வருவதைப் பார்க்கலாம். இது அறையின் வாசனையை மாற்றுவதோடு, குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மற்ற உணவுகளின் சுவையையும் பாதிக்கக்கூடும். 

ADVERTISEMENT

குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் சிறிய உணவுத் துகள்கள், அவ்வப்போது மீதமாகும் உணவு மற்றும் முறையற்ற சேமிப்பு (Improper storage fridge) ஆகியவைதான். மக்கள் பெரும்பாலும் உணவைத் திறந்த பாத்திரங்களில் விட்டுவிடுவதால், துர்நாற்றமும் ஈரப்பதமும் குளிர்சாதனப் பெட்டி முழுவதும் பரவுகின்றன. குளிர்சாதன பெட்டியில் கெட்ட வாசனை வீசுவது ஏன், அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.

உணவை மூடாமல் வைப்பது

குழம்புகள், சட்னி அல்லது வேறு ஏதேனும் சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் மூடாமல் வைத்தால் அதன் வாசனை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். மூடப்படாத உணவுவில் பாக்டீரியாக்கள் (Bacteria in food) வளர்வதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும். ஆகவே, உணவை எப்போதும் காற்றுப் புகாத பாத்திரங்கள் அல்லது மூடியுடன் கூடிய பாத்திரங்களில் சேமிப்பதே சிறந்தது. இது உணவின் அதே தன்மையுடன் பராமரிப்பதோடு, குளிர்சாதனப் பெட்டியில் ஏற்படும் துர்நாற்றத்தையும் குறைக்கிறது.

ADVERTISEMENT
பழைய உணவுகளை சேமித்து வைப்பது

குளிர்சாதனப் பெட்டியில் பழைய உணவைச் சேமித்து வைப்பது குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம். பலர் பழைய உணவைப் பல நாட்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, பின்னர் அதை மறந்துவிடுகிறார்கள். இந்த உணவு படிப்படியாகக் கெட்டுப்போய், துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவுகளை தவறாமல் (fridge odor removal) சரிபார்ப்பது அவசியம். கெட்டுப்போன அல்லது இனி பயன்படுத்த முடியாத உணவை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

காய்கறிகளை முறையாக பராமரிக்க வேண்டும்

காய்கறிகளை நீண்ட நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அவற்றில் ஈரப்பதம் உருவாகத் தொடங்கும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகள் விரைவில் கெட்டுப்போகும், மேலும் அவற்றின் துர்நாற்றம் குளிர்சாதனப் பெட்டி (Vegetables keep fresh) முழுவதும் பரவிவிடும். ஆகவே, காய்கறிகளைச் சேமித்து வைப்பதற்கு முன், அழுகிய இலைகளை அகற்றிவிட்டு, அவற்றை முறையாகச் சேமித்து வைக்கவும்.

ADVERTISEMENT
குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்வது முக்கியம்

குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறத்தை மட்டும் சுத்தம் செய்வது போதாது. மூலைகள், அலமாரிகள் மற்றும் டிராயர்களுக்குள்  சேரும் அழுக்குகளும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். குளிர்சாதனப் பெட்டியைத் (refrigerator cleaning tips) தவறாமல் சுத்தம் செய்வது உணவுக் கறைகள், சிந்திய நீர் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. லேசான சோப்பு நீர் அல்லது சமையல் சோடா போன்ற வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் மூலம் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யலாம்.

துர்நாற்றத்தைத் தடுப்பதற்கான எளிய வழிகள்

குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றத்தைக் குறைக்க அதில் பொருட்களை அதிகமாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான காற்றோட்டம் அவசியமாகும். குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள (prevent fridge smell) உணவுகளின் காலாவதி தேதி மற்றும்  தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். சிலர் குளிர்சாதனப் பெட்டியில் ஒரு சிறிய பாத்திரத்தில் சமையல் சோடாவையும் வைப்பார்கள், ஏனெனில் அது துர்நாற்றத்தை உறிஞ்ச உதவும்.

மொத்தத்தில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றத்தைப் புறக்கணிக்கக் கூடாது. சுத்தம் செய்வதில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் குளிர்சாதனப் பெட்டியை நீண்ட காலத்திற்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும், நல்ல நிலையிலும் வைத்திருக்க முடியும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share