காரணமே இல்லாம திடீர்னு பயமா இருக்கா? ‘ஃப்ரீ-ஃப்ளோட்டிங் ஆங்க்சைட்டி’ (Free-Floating Anxiety) பின்னணியில் இருக்கும் ரகசியங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

why do i feel anxious for no reason causes triggers guide

முக்கியக் குறிப்புகள்:

  • ஒரு குறிப்பிட்ட காரணமே இல்லாமல் திடீரென உடலில் தோன்றும் பதற்றத்தை (Anxious) உளவியலில் ‘ஃப்ரீ-ஃப்ளோட்டிங் ஆங்க்சைட்டி என்று அழைப்பார்கள்.
  • இது மனப் பலவீனம் அல்ல; உங்களது மூளையின் எச்சரிக்கை மையம் (Amygdala) அண்டர்-கிரவுண்டில் காட்டும் ஒரு ‘பொய் அலாரம்’ (False Alarm) ஆகும்.
  • தூக்கமின்மை, அதிக கஃபைன் (Caffeine) நுகர்வு மற்றும் உள்மன அழுத்தங்கள் இதற்கு முக்கியக் காரணங்கள்.

சுத்தி எல்லாமே நல்லாதான் நடந்துட்டு இருக்கும், ஆபீஸ்லயோ அல்லது வீட்லயோ எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனா, திடீர்னு நெஞ்சு படபடக்கும், கைகள் லேசா நடுங்கும், உள்ளுக்குள்ள ஏதோ ஒரு கெட்ட விஷயம் நடக்கப் போறது போன்ற ஒரு விவரிக்க முடியாத பயம் ஆக்கிரமிக்கும். “ஏன் இப்படி பதற்றமா இருக்கு?” என்று யோசித்தால் நியாயமான ஒரு காரணமும் தோணாது.

ADVERTISEMENT

உண்மையில், காரணமே இல்லாமல் நமக்கு ஏன் பதற்றம் வருகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான சில உடலியல் மற்றும் உளவியல் காரணங்கள் இதோ:

1. மூளையின் ‘பொய் அலாரம்’ (The Amygdala’s False Alarm)

நமது மூளையில் அமிக்டலா‘ (Amygdala) என்ற ஒரு பகுதி உள்ளது. இதுதான் நமக்கு ஏதேனும் ஆபத்து வரும்போது உடலை உஷார்படுத்தும் ‘செக்யூரிட்டி அலாரம்’ போலச் செயல்படுகிறது.

ADVERTISEMENT
  • சில நேரங்களில், இந்த அலாரம் சிஸ்டத்தில் லேசான கோளாறு ஏற்பட்டு, எவ்வித ஆபத்தும் இல்லாத சாதாரண சூழ்நிலையிலும் இது திடீரென ஃபைட் ஆர் ஃப்ளைட்‘ (Fight or Flight) சிக்னலை ஆன் செய்துவிடும்.
  • இதனால், ஆபத்து ஏதும் இல்லாவிட்டாலும், மூளை அட்ரினலின் (Adrenaline) ஹார்மோனை ரத்தத்தில் பாய்ச்சி விடுவதால், உடல் உடனடியாகப் படபடப்பு, வியர்வை போன்ற உண்மையான பதற்ற அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குகிறது.
2. ‘overflow’ ஆகும் உள்மன அழுத்தங்கள் (Subconscious Stress)

நம்முடைய தற்போதைய சூழ்நிலை மிகவும் அமைதியாக இருக்கலாம். ஆனால், கடந்த சில வாரங்களாகவோ அல்லது மாதங்களாகவோ நாம் சேர்த்து வைத்த சிறிய சிறிய கவலைகள், வேலைப் பளு, அல்லது தூக்கமின்மை போன்ற பல விஷயங்கள் நமது உள்மனதில் (Subconscious mind) அப்படியே தேங்கிப் போயிருக்கும்.

  • ஒரு கட்டத்தில், இந்தத் தேக்க நிலை உங்களது மனதின் கொள்ளளவைத் தாண்டி வழியும்போது (Overflow), அது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் பதற்றமாக வெளிப்படும்.
3. உடல் ரீதியான தூண்டுதல்கள் (Physical Triggers)

பல நேரங்களில் மனப் பதற்றத்திற்குக் காரணம் மனசு கிடையாது, நம்முடைய உடல்தான். உங்களது உடலின் சில எளிய மாற்றங்களை மூளை தவறாகப் புரிந்து கொண்டு பதற்றத்தை உண்டாக்குகிறது:

ADVERTISEMENT
  • அதிகப்படியான காபி/டீ (Caffeine): காபியில் இருக்கும் ‘கஃபைன்’ உங்களது நரம்பு மண்டலத்தை அதீதமாகத் தூண்டி, இதயத் துடிப்பை வேகமாக்கும். இந்த வேகமான இதயத் துடிப்பை மூளை “ஆபத்து வந்துவிட்டது” என்று தவறாகப் புரிந்து கொண்டு பதற்றத்தை ஆரம்பித்து வைக்கும்.
  • ரத்த சர்க்கரை அளவு சரிவது (Blood Sugar Crash): காலையிலோ அல்லது மதியமோ சரியாகச் சாப்பிடாமல் இருக்கும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று குறையும். இதனால் உடல் லேசாக நடுங்கத் தொடங்கும்; இந்த நடுக்கத்தையும் மூளை பதற்றமாக மாற்றிக் கொள்ளும்.
4. பொதுவான பதற்றக் குறைபாடு (Generalized Anxiety Disorder – GAD)

எப்போதாவது ஒருமுறை காரணம் இல்லாமல் பதற்றம் வருவது இயல்பானது. ஆனால், எந்தவொரு காரணமும் இன்றி வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு இந்தத் தொடர் பயம் நீடித்தால், அது GAD எனப்படும் பொதுவான பதற்றக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் (இரசாயனங்கள்) சமநிலையின்மையே இதற்கு முக்கியக் காரணமாகும்.

திடீரென பதற்றம் வரும்போது என்ன செய்ய வேண்டும்?

5-வினாடி மூச்சுப் பயிற்சி (Box Breathing): திடீரெனப் படபடப்பு ஏற்படும் போது, உங்களது எண்ணங்களை ஓடவிடாமல் தடுத்து, 4 வினாடிகளுக்கு மூச்சை உள்ளே இழுத்து, 4 வினாடிகள் நிறுத்தி வைத்து, பின்னர் 4 வினாடிகளுக்கு மெதுவாக வெளியில் விடுங்கள். இது மூளையின் செக்யூரிட்டி அலாரத்தை உடனடியாக ‘ஆஃப்’ செய்ய உதவும்.

  • தண்ணீர் குடியுங்கள்: ஒரு கிளாஸ் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பது, உங்களது வேகஸ் நரம்பைத் தூண்டி, வேகமான இதயத் துடிப்பை உடனடியாகச் சீராக்க உதவும்.

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share