நடுவானில் விமானத்தில் இந்திய விமானியை கத்தியால் குத்திய ஓமன் துணை விமானி யார்? அதிர்ச்சி தகவல்கள்!

Published On:

| By Mathi

Oman Pilot

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய 29 வயது ஓமன் துணை விமானி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

174 பயணிகளுடன் செப்டம்பர் 30-ந் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி ஃப்ளைதுபாய் FZ1073 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் இயக்கினார். அவருடன் துணை விமானியாக இருந்தவர் ஹமாம் அல்-ஹம்மாமி. அவர்தான் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தியவர்.

ADVERTISEMENT

அல்-ஹம்மாமியின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலும் விமானிகள் அறையின் கதவை ஸ்மித் மச்சார் திறந்தார். இதையடுத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளே சென்று அவரை மடக்கிப் பிடித்தனர்.

விமானத்தில் பயணித்த மற்ற இரண்டு விமானிகள் உடனடியாக விமானத்தை இயக்கினர். பின்னர் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.

ADVERTISEMENT

ஹமாம் அல்-ஹம்மாமி யார்?

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஹமாம் அல்-ஹம்மாமி குறித்த மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024-ம் ஆண்டு ஓமன் ஏர் நிறுவனத்தில் துணை விமானியாக அல்-ஹம்மாமி பயிற்சியில் இருந்தபோது, பயங்கரவாத தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவர் விமானங்களை இயக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

அப்படியான நிலையில் ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் துணை விமானியாக அவர் எப்படி பணியில் சேர்ந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் செல்லும் விமானத்தில் அல்-ஹம்மாமி எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத நோக்கம் இருந்ததா அல்லது வேறு காரணம் இருந்ததா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share