உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மகன் மாணிக்கம் நெடுமாறன்
(வயது 57) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அக்டோபர் 1-ஆம் தேதி காலமானார்.
பழ. நெடுமாறன் மகன் மாணிக்கம் நெடுமாறன், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பணிபுரிந்து வந்தார். அங்கு புத்த மதத்தைத் தழுவி புத்த துறவியாக வாழ்ந்து வந்தார் மாணிக்கம்.

கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி காலை 8.45 மணிக்கு அவர் காலமானார்.
மாணிக்கம் நெடுமாறனின் இறுதிச் சடங்குகள் புத்த மதப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும். பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் அவரும், அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை.
