’ஜெம்’ வீரமணி வழக்கு: வாட்ஸ் ஆப் எண்ணில் 5 புதிய தகவல்கள் – விசாரணையில் சந்தேக பண பரிவர்த்தனைகள்!

Published On:

| By Mathi

Jem Veeramani Case

சிறுமிகளை சீரழித்த ‘ஜெம்’ வீரமணி வழக்கில் பாதிப்புக்குள்ளான சிறுமிகள் 9345319676 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல்களை தந்துள்ளதாகசென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை செய்தி அறிக்கை: கடந்த 06.10.2025 அன்று சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு, சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கொடுத்த புகார் மற்றும் Pen Drive ஒளிப்பதிவு ஆதியவற்றின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து,

ADVERTISEMENT

சென்னையைச் சேர்ந்த

  1. வீரமணி (84),
  2. சாந்தி (60)
  3. மகேந்திர சிம்ஹன் (63)
  4. கணேசன் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பாதிப்பிற்குள்ளான சிறுமிகளின் உறவினர்கள் கொடுத்த புகார்கள் உட்பட இதுவரை 4 வழக்குகள் பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளன.

ADVERTISEMENT

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வீரமணி உட்பட மற்றவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பாதிப்புக்குள்ளான சிறுமிகள் குறித்த தகவல்களை தர 9345319676 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் எண்ணில் இதுவரை 5 உபயோகமான தகவல்கள் பெறப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஜெம் வீரமணி பயன்படுத்திய சந்தேகத்திற்குரிய பணபரிவர்த்தனைகள் விசாரணையில் உள்ளன.

ADVERTISEMENT

இக்கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்களால் இன்று (01.10.2026) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share