கையில் பணத்தோடு போங்க… தமிழக கடைகளில் நாளை UPI பரிவர்த்தனையை நிறுத்த அழைப்பு!

Published On:

| By Mathi

UPI-TN Traders

தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 2) கடைகளில் UPI பரிவர்த்தனைகளை ஒருநாள் நிறுத்த வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் ரூ.2,000-க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து, அக்டோபர் 7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ADVERTISEMENT

அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த போராட்டத்துக்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் இப்பேரவை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அந்நியப் பொருட்களையும், அநீதியான வரிகளையும் எதிர்த்து அறவழியில் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும், தங்கள் கடைகளில் உள்ள அனைத்து வகையான UPI, QR கோடு பணப் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி, ரொக்கப் பண பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு சவுந்தரராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘No UPI Day’ போராட்டம் வாபஸ்

முன்னதாக, ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் வணிக நிறுவனங்களில் ‘No UPI Day’ போராட்டம் நடத்த வணிகர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

ADVERTISEMENT

இதற்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வணிகர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நாடு தழுவிய ‘No UPI Day’ போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி UPI பரிவர்த்தனைகளை ஒருநாள் நிறுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share