ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வீரமணி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

அவரது கூட்டாளிகளான சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் சாந்தி, மகேந்திர சிம்ஹன் இருவரும் ஜாமீன் கேட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

அக்டோபர் 9ஆம் தேதி வரை ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை டிஜிபி அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்த சூழலில், ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று (அக்டோபர் 1) பிறப்பித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share