நடுவானில் 174 உயிர்களை காப்பாற்றிய ஸ்மித் மச்சார்… கூகுளில் ‘ஜாதி’யை தேடிய இந்தியர்கள்!

Published On:

| By Mathi

Smith Machar- caste

நடுவானில் 174 பேரின் உயிரை காப்பாற்றி உலக நாடுகளின் ஹீரோவாக மாறிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பற்றி கூகுளில் இந்தியர்கள் அதிகளவில் தேடி வருகின்றனர். இதில் அவரது ஜாதி என்ன என்பது தொடர்பான தேடல்களும் திடீரென அதிகரித்துள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட மோதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த நிலையிலும் அவர் விமானிகள் அறையின் கதவை திறந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உதவியை பெற்றார். இதனால் விமானத்தில் இருந்த 174 பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோரும் அவரை ஹீரோ என பாராட்டியுள்ளனர்.

இதனால் இந்தியாவில் ஸ்மித் மச்சார் யார் என்பதை தெரிந்துகொள்ள கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஜாதியை தேடிய இந்தியர்கள்

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் Smit Machchhar என்ற பெயரை வைத்து மேற்கொள்ளப்பட்ட தேடல்களை Google Trends மூலம் பார்க்கும்போது சுவாரசியமான தகவல் தெரியவந்துள்ளது.

ஸ்மித் மச்சார் தொடர்பான அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் pilot smit machchhar, smit pilot, captain machchhar, flydubai ஆகியவை முன்னிலையில் உள்ளன.

ADVERTISEMENT

அதே பட்டியலில் machchhar caste, smit machchhar caste என்ற தேடல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு தேடல்களையும் Google Trends தனது வேகமாக அதிகரித்து வரும் தேடல்கள் பட்டியலில் ‘Breakout’ என காட்டியுள்ளது.

மேலும் Smit Machchhar caste மட்டுமின்றி, அவரது குடும்பப் பெயரை வைத்து machchhar surname caste என்றும் இந்தியாவில் தேடியுள்ளனர். கடந்த 7 நாட்களில் பெரும்பாலும் தேடப்படாமல் இருந்த இந்த வார்த்தை, அக்டோபர் 1-ம் தேதி அன்று திடீரென Google Trends-ல் இடம்பிடித்துள்ளது.

இதன் மூலம் ஸ்மித் மச்சார் குறித்த செய்திகள் வெளியான பிறகு அவரது ஜாதி என்ன என்பதை தெரிந்துகொள்ளும் தேடலும் திடீரென அதிகரித்திருப்பது தெரியவருகிறது.

ஸ்மித் மச்சார் குறித்து ஊடகங்கள்..

இதனிடையே ஸ்மித் மச்சாரின் பின்னணி குறித்த தகவல்களையும் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

குஜராத்தை சேர்ந்த DeshGujarat வெளியிட்ட செய்தியில், ஸ்மித் மச்சார் “குஜராத்தி நாகர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று Vibes of India வெளியிட்ட செய்தியிலும் ஸ்மித் மச்சார் குஜராத்தி நாகர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என செய்திகள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆஜ்தக், இந்தியா டுடே, நவபாரத் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் அவரை குஜராத் பூர்வீகத்தை சேர்ந்தவர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளன; அவரது ஜாதியை குறிப்பிடவில்லை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share