மதுரை வழியாக கொல்லம்–ராமேஸ்வரம் புதிய இன்டர்சிட்டி ரயில் இயக்க கோரிக்கை!

Published On:

| By Mathi

Kollam-Rameswaram Train

கொல்லம்–ராமேஸ்வரம் இடையே மதுரை வழியாக புதிய இன்டர்சிட்டி ரயிலை (Kollam-Rameswaram train) இயக்க வேண்டும் என்று மதுரை கோட்ட ரயில் பயனர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டால் தென் கேரளா மற்றும் தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த ஊர்களுக்கு பயன்?

புதிய ரயிலை கொல்லத்தில் இருந்து புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேஸ்வரம் வரை இயக்க வேண்டும் என்பது கோரிக்கை.

ADVERTISEMENT

இதன் மூலம் கொல்லம், புனலூர் பகுதிகளில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் வசதி கிடைக்கும்.

மேலும் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மதுரை மற்றும் ராமேஸ்வரத்திற்கு பயணிக்கவும், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் தென் கேரளாவுக்கு செல்லவும் இந்த ரயில் வசதியாக இருக்கும்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share