சென்னை: ஒரே மாதத்தில் 2 மடங்காக அதிகரித்த டெங்கு பாதிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 2 மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 18,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் அது இரண்டு மடங்கு அதிகரித்து 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 72 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேருக்குச் சாதாரண காய்ச்சலாகவே உள்ளது. இவர்கள் வீடுகளிலேயே ஓய்வெடுத்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று குணமடைந்து வருகின்றனர். மீதமுள்ள 5 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT

எனவே, சளி, இருமல் இல்லாமல் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் வலி இருந்தால், அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்வதைத் தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share