சென்னையில் இன்று (அக்டோபர் 30) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சரவன் ரூ.240 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.30 குறைந்து ரூ.13,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,09,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.240 குறைந்து ரூ.11,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,920 குறைந்து ரூ.89,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
