டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன? பாஜகவுக்குள் பதுங்கும் ஸ்லீப்பர் செல்கள்- ‘பரபர’ வியூகம்!

Published On:

| By Mathi

Digital Thinnai Annamalai

வைஃபை ஆன் செய்ததும், “வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே வரான் வரான்”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

யாருங்க ப்ரோ.. வாரணாசி கேட்டை தாண்டி வர்றது.. ‘அவரா’?

புரிஞ்சுகிட்டீங்களே ப்ரோ.. பாஜகவை விட்டு வெளியே வந்து தனிக் கட்சி தொடங்கிட்டாரே அண்ணாமலை (Annamalai).. அடுத்து என்ன செய்வாருன்னுதான் எல்லாருமே ரொம்பவே எதிர்பார்ப்பா இருக்காங்க..

ADVERTISEMENT

அண்ணாமலை பாஜகவைவிட்டு வந்தாலும் அவரால ஒரு பிரச்சனை புகைஞ்சுகிட்டு இருக்கு.. இங்கே இல்லை ஆந்திராவில்..

என்னது ஆந்திராவிலா?

ஆமாங்க ப்ரோ.. ஆந்திராவில 4 ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு எலக்‌ஷன் நடக்குது.. இதுல 2 தெலுங்குதேசம், 1 ஜனசேனா, 1 பாஜகவுக்கு ஒதுக்கி வெச்சிருந்தாங்க.. பாஜகவோட 1 சீட் அண்ணாமலைக்குன்னு சொல்லி இருந்தாங்களாம்..

ADVERTISEMENT

ஆனால் அண்ணாமலையோ பாஜகவில இனி இருக்கவே முடியாதுன்னு மோடி- அமித்ஷாகிட்டேயும் சொல்லிட்டு வெளியே வந்துட்டாரு.. அவரோட ராஜினாமாவையும் ஏத்துகிட்டாங்க.. அண்ணாமலையும் தனிக் கட்சி தொடங்குறதா டெல்லியில அறிவிச்சாரு..

அந்த அறிவிப்போட சென்னைக்கு வந்தவருக்கு ஏர்போர்ட்ல மாஸ் வரவேற்பும் கொடுத்தாங்க..

ADVERTISEMENT

இப்ப ஆந்திராவில என்ன சிக்கல்னா, ”அண்ணாமலைக்குதானே சீட்டுன்னு பாஜக சொல்லுச்சு.. அவருதான் கட்சியை விட்டே போயிட்டாருல்ல.. அந்த எம்பி சீட்டுல நாங்களே நிற்கிறோம்”னு தெலுங்கு தேசம் தலைவரான முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லி இருக்காரு.. நாயுடுவோட இந்த முடிவால பாஜக அதிர்ச்சியாகிடுச்சாம் ப்ரோ..

சரிங்க ப்ரோ.. அண்ணாமலை கட்சி பெயர், கொடி, கொள்கை எல்லாம் எப்ப அறிவிக்க போறாங்களாம்..?

இதை பத்தி அண்ணாமலைக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “இப்போதைக்கு சப்போர்ட் எவ்வளவு இருக்குன்னு ’வீ த லீடர்’ வெப்சைட் மூலமா பார்த்துகிட்டு இருக்கிறார்.. தனிக் கட்சின்னு அறிவிச்ச நாளில்ல இருந்து 3 மாசம் கட்சிக்குள்ள ‘ஆட்சேர்ப்பு’ நடவடிக்கை மட்டும்தான்..

இந்த 3 மாசத்துக்குப் பிறகுதான் கட்சி பெயர், கொடி எல்லாம் அறிவிப்பார் அண்ணாமலை”ன்னு சொல்றாங்க..

அண்ணாமலை கட்சியோட கொள்கை என்னவாம் ப்ரோ?

அண்ணாமலை கட்சி பாஜகவோட தமிழ்நாடு வெர்சனாத்தான் இருக்கும்னு பலரும் விமர்சிக்கிறாங்க.. பாஜக கொண்டையை மறைங்க ப்ரோன்னு அமைச்சர் வன்னி அரசு கூட கிண்டலடிச்சு இருக்காரு..

இதை பத்தி அண்ணாமலை சர்க்கிளில் கேட்டப்ப, “சார்.. மண்ணுக்கேத்த மார்க்சியம் இருக்கலாம்.. காலத்துக்கேத்த பெரியாரிசம் இருக்கலாம்.. அதுமாதிரி மண்ணுக்கேத்த தேசியம் இருக்க கூடாதா? தமிழ்நாட்டு நலனுக்காகத்தான் எப்பவுமே அண்ணாமலை குரல் கொடுக்கிறவர்.. தமிழக பாஜக தலைவரா இருந்தாலும் கூட நம்ம மாநில நலனுக்கு ஆபத்துன்னா உடனே குரல் கொடுப்பாரு.. இப்ப கூட மும்மொழிக் கொள்கையை, நீட் தேர்வை எதிர்க்கிறாரு.. இந்த மாதிரி தமிழ்நாட்டுக்கான உரிமை குரல் கொடுக்கிற ஒரு மைல்ட் தேசிய கட்சியாக இருக்கனும்னு அப்படிங்கிறதுதான் அண்ணாமலையின் விருப்பம்..

கட்சி பெயர், கொடி எல்லாத்தையும் அறிமுகம் செய்யும் போதே கொள்கையையும் அறிவிப்பாரு.. அதுக்கு பிறகுதான் கட்சியோட கட்டமைப்பை வலுப்படுத்துவாரு.. கட்சியை எப்படி கட்டமைக்கனும்னு அவரு புதுசா பாடமும் கத்துக்க வேண்டியதில்லைங்கிறதால ரொம்பவே எதிர்பார்ப்போட இருக்காங்க”ன்னு சொல்றாங்க..

பாஜகவில் இருந்து பலரும் வெளியே போறேன்னு அறிவிக்கிறாங்களே ப்ரோ?

ஆமாம் ப்ரோ.. ”அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கிட்டதால ”யாரையும் நம்பி போகாதீங்க.. மோடி- அமித்ஷா ஆசீர்வாதம் யாருக்கும் இல்லை”ன்னு நயினார் நாகேந்திரன் அறிக்கையே கொடுத்திருக்காரு.. அதுக்காக பாஜகவை விட்டு வெளியே வராமலா இருக்காங்க.. அப்படியே அவங்க பாஜகவில் இருந்தாலும் அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்லாத்தான் இருப்பாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share