பரபரப்பான சூழ்நிலையில் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று ஏப்ரல் 20 காலை 10.30 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அவரை சக நிர்வாகிகள் வரவேற்றனர். What happening MDMK executive meeting
பொதுச் செயலாளர் வைகோ பத்தே கால் மணிக்கு தாயகத்துக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்றனர். வைகோ வந்த பிறகு அவரது அறைக்கு சென்ற மல்லை சத்யா, சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் கூட்டம் நடக்கும் அறைக்கு சென்றார்.

துரை வைகோ 10.30 மணிக்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்கிய போது மதிமுகவின் எதிர்காலமே என முழக்கம் எழுப்பி, நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்றனர். 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வைகோ நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரது வலது பக்கம் செந்திலதிபன், துரை வைகோ ஆகியோர் அமர்ந்திருந்தனர். இடது பக்கம் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், திருச்சி ரஹையா அவருக்கு அடுத்து மல்லை சத்யா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் கூட்டத்தை தொடங்கி வைத்தார். சில இரங்கல் அறிவிப்புகளுக்குப் பிறகு.. ‘முதன்மை செயலாளர் துரை வைகோவின் பதவி விலகலை இந்த நிர்வாக குழு முழுமையாக மறுக்கிறது’ என்று அறிவித்தார்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாக குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் கைத்தட்டி வரவேற்றனர். What happening MDMK executive meeting
தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு நிர்வாக குழு உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர். அதற்குள் மதிய இடைவேளை வந்ததால், சிறிது நேரத்தில் உணவு அருந்திவிட்டு கூட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படியே கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று (ஏப்ரல் 19) மின்னம்பலத்தில் மதிமுக நிர்வாக குழு… மல்லை சத்யா, துரை வைகோ திட்டம் என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் துரைவைகோ நேற்று தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு திரட்டியதை சுட்டிக்காட்டியிருந்தோம். What happening MDMK executive meeting
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரது பதவி விலகலை ஏற்க முடியாது என்றும் பேசி வருகின்றனர்.
