நாளை ( ஏப்ரல் 20) மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள துரை வைகோ, அடுத்த கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். MDMK executive committee meeting… What is Mallai Sathya, Durai Vaiko’s plan?
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது பொதுவெளியில் பெயர் குறிப்பிடாமல் சில புகார்களை கூறி, தனது முதன்மைச் செயலாளர் பதவியை இன்று ராஜினாமா செய்தார் துரை வைகோ. இதனால் மதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை பற்றி விவாதிக்க ஏப்ரல் 20 ஆம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தை ஏற்கனவே வைகோ கூட்டியிருக்கிறார்.
’நிர்வாகக் குழுவில் கலந்துகொள்வேன், அதற்குப் பிறகு நடக்கும் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ள துரை வைகோ இன்று பகல் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனது வீட்டுக்குச் சென்றார். அங்கே பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “இது எங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம். இதை நாங்கள் நிர்வாகக் குழுவில் தீர்த்துக் கொள்வோம். நிர்வாகக் குழுவில் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்தை எடுத்துச் சொல்வார்கள். மாவட்டச் செயலாளர்களின் கருத்துப்படியே நாளை நிர்வாகக் குழுவின் முடிவு எட்டப்படும்” என்று கூறினார்.
முன்னதாக இன்று காலையே துரை வைகோ மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘நிர்வாகக் குழு கூட்டத்தில் எனது நிலைப்பாட்டுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும், மதிமுகவை நாம் அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்ல வேண்டும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என்று உரிமையோடு கேட்டிருக்கிறார் .
இந்த உரையாடலுக்குப் பிறகுதான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தொண்டர்களின் கருத்தை நிர்வாகக் குழு கூட்டத்தில் தெரிவிப்பார்கள். அதன்படி முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார் துரை வைகோ. MDMK executive committee meeting… What is Mallai Sathya, Durai Vaiko’s plan?
இன்னொரு பக்கம் மல்லை சத்யாவிடம் ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மல்லை சத்யா தரப்பினரிடம் அடுத்த கட்டம் பற்றி கேட்டபோது, “பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மல்லை சத்யாவுடன் பேசினார். அதன் பிறகு பேசவில்லை. மல்லை சத்யா நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வார். அங்கே தனது தரப்பு விளக்கத்தையும் வாதத்தையும் எடுத்து வைப்பார். தன்னால் வைகோவுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான் மல்லை சத்யாவின் எண்ணம். நிர்வாகக் குழுவில் பொதுச் செயலாளர் வைகோவின் முடிவை அவர் ஏற்பார்” என்கிறார்கள்.
