டி20 உலகக்கோப்பை: இந்திய அணி செய்யவுள்ள மாற்றங்கள் என்ன?

Published On:

| By Jegadeesh

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியானது நாளை (செப்டம்பர் 20)மொஹாலியில் தொடங்க உள்ளது.

ADVERTISEMENT

இந்திய அணி தற்போது முழு பலத்துடன் களமிறங்க உள்ளதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை பலரும் எதிர்நோக்கி வருகிறார்கள்.

ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாட முடியாத பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

T20 World Cup

இது குறித்து அவர் பேசுகையில்: “அடுத்ததாக நடைபெற இருக்கும் டி20 போட்டிகளிலும் நாங்கள் என்னவெல்லாம் வித்தியாசமாக முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோமோ அதனை எல்லாம் செய்வோம்.

ADVERTISEMENT

பரிசோதனை செய்து பார்ப்பதற்கு எந்தவித எல்லையும் கிடையாது. எனவே வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

T20 World Cup

மேலும் , ‘நான் கேப்டன் பொறுப்பு ஏற்ற உடனே ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து தெளிவாக பேசிவிட்டேன்.

அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தால் எவ்வாறு விளையாட வேண்டும். விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்திருந்தால் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து வீரர்களுக்கு நன்றாக தெரியும்.

எனவே நாங்கள் திட்டம் தீட்டும் நேரம் எல்லாம் முடிந்துவிட்டது.

இனி களத்தில் இறங்கி செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டும்தான் எங்களுடைய எண்ணம்.

கடந்த 10 மாதங்களாகவே வீரர்களின் செயல்பாடு குறித்து எந்தவித ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை.

இந்த டி20 போட்டிகள் முடிந்த பின்பு உலக கோப்பைக்கு முன்பாக நாங்கள் ஒரு ஆலோசனை கூட்டத்தை முடிவு செய்து அதன் மூலம் சரியான முடிவுகளை பெறுவோம்” என கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

200 பொறியாளர்களைப் பணியிலிருந்து நீக்கிய ஓலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share