”இதை அவரிடம் எதிர்பார்க்கல” : முதல்வர் விஜய் குறித்து பிரக்ஞானந்தா பேட்டி!

Published On:

| By Kavi

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார். 

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அழைத்து தமிழக அரசு இன்று (ஜூன் 8)கவுரவித்தது. 

ADVERTISEMENT

தலைமை செயலளகத்தில் முதல்வர் விஜய்யை பிரக்ஞானந்தாவும் அவரது பெற்றோர்களும் சந்தித்தனர். 

அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார்.  தொடர்ந்து பிரக்ஞானந்தாவுக்கு  ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை  வழங்கினார். 

ADVERTISEMENT

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா,  ’ நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்றதற்காகத் தமிழக முதல்வர் என்னைச் சந்திப்பதற்காக அழைத்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. முதல்வரே போர்டு எடுத்து வரச் சொல்லி என்னுடன் ஒரு கேம் விளையாடினார். 

ADVERTISEMENT

முதல்வர் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று எனக்குத் தெரியாது, நான் கேள்விப்பட்டதும் இல்லை. அவரே போர்டு எடுத்து வரச் சொல்லி அந்த டேபிளிலேயே அரேஞ்ச் செய்து விளையாடினோம்.

அவரிடம் எப்போதெல்லாம் விளையாடுவீர்கள் என்று கேட்டதற்கு, நண்பர்களுடன் விளையாடுவேன் என்று கூறினார். போட்டியில் நான் வெற்றி பெற்றேன். சுமார் 15 நிமிடங்கள் இந்த விளையாட்டு நீடித்தது. 

டோர்னமென்ட் இப்பதான் முடிந்தது, அதற்குள் உடனே கூப்பிட்டுப் பேசியது நல்ல சப்போர்ட் ஆக இருக்கிறது. சந்திப்பின் போது நான் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. 

இப்போது விளையாட்டுத் துறைக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது. நான் எலைட் ஸ்கீமில் (Elite Scheme) இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள டாப் பிளேயர்கள் அனைவரும் இதில் இருக்கிறார்கள். இதன் மூலம் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. செஸ் விளையாட்டுக்கு நல்ல அங்கீகாரம் கிடைப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share