சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிகள் இன்று (செப்டம்பர் 18) மாலை தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.
சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இறுதி நாளான இன்று (செப்டம்பர் 18) இறுதிச் சுற்றுப் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே இறுதிப் போட்டி வரை வந்துள்ளனர்.
மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அதுபோன்று இறுதிப் போட்டி நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்து போட்டிகளை பார்வையிட்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர் கே.என். நேரு, ஆ. ராசா எம்.பி உள்ளிட்டோரும் வந்துள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்குகிறார்.

இறுதிப் போட்டி ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா மற்றும் போலாந்து வீராங்கனை மேக்டோ லினெட் மோதுகின்றனர்.
இரட்டையர் பிரிவில் கனடா வீராங்கனை கேப்ரியல்லா டப்ரோவ்ஸ்கி மற்றும் பிரேசில் வீராங்கனை லுயிசா ஸ்டேபானி கூட்டணி, ரஷ்ய வீராங்கனை ஆனா லின்கோவா மற்றும் ஜார்ஜியா வீராங்கனை கூட்டணி எதிர்கொண்டனர்.

இரட்டையர் பிரிவு போட்டி இறுதியில் லூயிசா ஸ்டேபானி மற்றும் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். 6-1, 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றியடைந்தனர்.
போட்டி முடிந்த பிறகு சாம்பியன் பட்டம் வெல்லும் வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்குக் கோப்பைகளும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
மோனிஷா
தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!
