மழை அப்டேட் ; இன்று எங்கெங்கு மழை?

Published On:

| By Kavi

weather Update rain in 8 districts today

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 22) 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால், தமிழகத்தில் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (21-10-2023) காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (22-10- 2023) 08:30 மணி அளவில் பரதீப் (ஒடிசா)-ற்கு தெற்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)-விற்கு தெற்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது.

ADVERTISEMENT

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.

2.நேற்று (21-10-2023) தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் நேற்று நண்பகல் தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று இரவு மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22-10-2023) காலை 08.30 மணி அளவில் அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

ADVERTISEMENT

இது மேலும் வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து 24-10-2023 அன்று மிகத்தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

8 மாவட்டங்களில் மழை

22.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2023 மற்றும் 26.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் 22.10.2023 மாலை வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2023 மாலை முதல் 25.10.2023 வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 22.10.2023 காலை முதல் 23.10.2023 வரை சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை பகுதிகளில் 23.10.2023 அன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24.10.2023 முதல் 26.10.2023 வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 22.10.2023 இரவு வரை சூறாவளி காற்று மணிக்கு 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 200 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 23.10.2023 மாலை வரை மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.10.202 அன்று சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 22.10.2023 மாலை வரை சூறாவளி காற்று மணிக்கு 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 200 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

22.10.2023 மாலை முதல் 23.10.2023 காலை வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 190 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 220 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 23.10.2023 மாலை வரை மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.10.2023 மாலை சூறாவளி காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

எனவே,மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும், ஆழ் கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

ராஷ்மிகாவின் புது பட டைட்டில்!

திமுக யாருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது? விஜயபாஸ்கர்

SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share