rashmika new movie title the girl friend

ராஷ்மிகாவின் புது பட டைட்டில்!

சினிமா

தமிழ்,தெலுங்கு, கன்னட, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து, தனது க்யூட் ரியாக்ஷன்ஸ் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் டீசரும், பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Chi La Sow, Manmadhudhu 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவின் 24வது படம் உருவாகிறது. இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் இசையமைக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஷ்மிகாவின் 24வது படமான இந்த படத்திற்கு “The Girlfriend” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் வெளியீட்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா நீருக்குள் மூழ்கி இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. Chi La Sow படத்திற்காக இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தேசிய விருது வென்றதால், ராஷ்மிகா – ராகுல் ரவீந்திரன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது The Girlfriend படத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கார்த்திக் ராஜா

SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *