sk21 team gives surprise gift

SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!

சினிமா

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து SK 21 படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மைய கதையாக கொண்டு SK 21 படம் உருவாகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு மேக்கிங் glimpse வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகிய யாரும் இடம் பெறவில்லை. இயக்குனரின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ என்பதால் வீடியோ முழுக்க இயக்குனர் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறார்.

கார்த்திக் ராஜா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!

காசாவை தொடர்ந்து லெபனான்… போருக்கு தயாராகும் இஸ்ரேல்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *