சென்னை : 3 ரயில் நிலையங்கள் மூடல்!

By Balaji

|

Published on 4 Feb 2018, 12:00 AM

சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று (பிப்ரவரி 4) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கே ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக பூங்கா, கோட்டை, கடற்கரை ஆகிய 3 ரயில் நிலையங்களுக்கு இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கும் தினமும் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் லட்சக் கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

இன்று எழும்பூரில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூரில் இருந்தே இயக்கப்பட்டன. செங்கல்பட்டிலிருந்து கடற்கரை வரை செல்லும் ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் வழியாக செல்லும் வெளியூர் ரயில்களும், எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது. இதனால் இன்று காலை எழும்பூரில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது .

ADVERTISEMENT

பராமரிப்பு காரணமாக இன்று எழும்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே மின்சார ரயில் இயக்கப்படும் என்கிற அறிவிப்பு நேற்று முதல் அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. எனினும், மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் வந்து கடற்கரை ரயிலில் பயணம் செய்யக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel