தமிழக அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் கீர்த்தனா இல்லை; தாம்தான் என்று மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினுஷா வீடியோ வெளியிட்டுள்ளார்.
”தமிழக அமைச்சர் கீர்த்தனா இது” என்கிற விமர்சனத்துடன் ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. ஆனால் அது தான் இல்லை என அமைச்சர் கீர்த்தனாவும் விளக்கம் கொடுத்திருந்தார்.

மலேசியா பெண் வினூஷா விளக்கம்
இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் சாயலில் உள்ள மலேசியாவை சேர்ந்த வினூஷா என்ற பெண் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வினுஷா கூறியுள்ளதாவது: எல்லாத்துக்கும் வணக்கம். என் பேரு வினுஷா. நான் ஏன் இந்த வீடியோ செய்றேன்னு MOSTLY பீப்பிள்க்கு சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, எல்லாத்துக்குமே தெரிஞ்சிருக்கும் சோஷியல் மீடியால என்ன வீடியோ வைரலா போயிட்டு இருக்குன்னு.
இது வந்து என்னோட கிளாரிஃபிகேஷன் வீடியோ மட்டும்தான். நான் ரொம்ப ஷார்ட்டா முடிச்சுக்கிறேன். இதுதான் என்னோட போலீஸ் ரிப்போர்ட். அதனாலதான் நான் ரொம்ப லேட்டா இந்த வீடியோ செய்யக் காரணம். நான் ஜஸ்ட் போலீஸ் ரிப்போர்ட், பிகாஸ் நான் இந்த ரெண்டு நாளா வந்து ஓடிட்டிருக்க ஒரு விஷயம் வந்து, it literally cost me so much of stress.
எனக்குத் தெரியல, அந்த வீடியோல வந்து என்ன தப்பா இருந்துச்சுன்னு. I was just getting done from my car, and then நான் வந்து கோயிங் டூ மை வொர்க், அது ஒரு பர்சன் வந்து எடுத்து, ஒரு அமைச்சர், இந்தியால இருக்கிற ஒரு மினிஸ்டர்ன்னு நினைக்கிறேன், அவங்களை ரிலேட்டட் பண்ணி அந்த வீடியோல போட்டுருக்காங்க.
அவங்க போட்ட காரணம் வந்து, அமைச்சர் இந்த மாதிரி ஒரு டிரஸ் போடலாமா அப்படின்ற ஒரு காரணம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், அந்த வீடியோல இருக்கிற பர்சன் நான். அவங்க வந்து மினிஸ்டர் கிடையாது.
சோ, அந்த வீடியோ போஸ்ட் பண்ண பர்சனுக்கு சொல்றேன், we are already taking necessary action. எனக்கு என்னை பொறுத்த வரைக்கும் நான் நினைக்கிறேன், நீங்க வந்து மலேசியன் இல்ல அப்படின்னு நான் நினைக்கிறேன். சோ, அதனாலதான் உங்களுக்கு டிஃபரன்ஷியேட் பண்ணத் தெரியல. சோ, we are already, we are already அந்த நெசசரி ஆக்ஷன் எடுத்ததா இருக்கோம்.
அண்ட் செகண்ட் திங், அந்த வீடியோ கீழ கமெண்ட் பண்ணவங்க, அந்த வீடியோ கமெண்ட் பண்ண, அந்த வீடியோ பார்த்தவங்களுக்கு எல்லாத்துக்குமே தெரியும், which is நான் அந்த வீடியோல இருந்தது.
ஃபுல், அண்ட் அந்த வீடியோல சப்போர்ட் பண்ண எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப நன்றி. I’m very, very grateful. அண்ட் அந்த வீடியோ கீழ கமெண்ட் பண்ண பேட் கமெண்ட்ஸா இருக்கட்டும், இல்ல அந்த வீடியோல இருந்து அந்த பிக்சரை எடுத்து, ட்ரோல் பண்ணவங்களா இருக்கட்டும், நான் பார்த்த நிறைய வீடியோ வந்து பேட் சாங், பேட் வீடியோஸ், பேட் எடிட்ல போட்டி, அதெல்லாம் நான் பார்த்ததா இருந்தேன்.
இப்ப let me try something, it did not break me. நான் வந்து டவுன் ஆவல, yes I was depressed. நான் ரொம்ப பயந்த ஒரு விஷயம், இது இது இந்த வீடியோ வைரலாகி என்ன ஆகப்போகுதோ அப்படின்னு. பட் என் கூட இருந்தவங்க, which is my sibling, my family, they made it very simple. மீன்ஸ், டென்ஷன் ஆகுறதுக்கு ஒன்னும் இல்ல. இது உன் தப்பு கிடையாது, you did not do anything wrong.
அண்ட் செகண்ட், இந்த வீடியோல வந்து இன்னும் அப்ரோபிரியேட்டா டிரஸ் பண்ணிருக்கா, டீசன்ட்டா டிரஸ் பண்ணலைன்னு சொல்றாங்க. நான் என்ன அப்படி அதுல டீசன்ட்டா டிரஸ் பண்ணலைன்னு எனக்குத் தெரியல.
Just because I’m wearing a short dress, yes நான் வேலைக்குப் போறேன். நான் மலேசியால வேலை செய்றேன். சோ, நான் வேலைக்குப் போறப்ப, நான் அதுக்கான, அதுக்கு ஏத்த மாதிரிதான் நான் டிரஸ் பண்ணிட்டுப் போறேன். சோ, தயவுசெய்து நீ இந்த சட்டை போட்டதுனாலதான் அந்த வீடியோ போட்டுருக்காங்க அப்படின்ற கொஸ்டின் ரைஸ் பண்ணாதீங்க.
நான் அங்க வேற டிரஸ் போட்டிருந்தா கூட, அவங்க ஸ்டில் வீடியோ எடுத்து போட்டிருப்பாங்க. Because they were meant அந்த வீடியோ வந்து எனக்கு மென்ட் பண்ணக் கிடையாது, வேற ஆளுக்கு மென்ட் பண்ண வீடியோ.
சோ, ஸ்டாப் என்ன அதுல் அட்டாக் பண்றதை நிப்பாட்டுங்க. அவங்களை அட்டாக் பண்றதை நிப்பாட்டுங்க. Because அவங்க அந்த டிரஸ்ஸ போடக் கிடையாது, ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அவங்க கிடையாது, நானு.
it already went viral. நியூஸ் சேனல், I saw a news channel, influencers account, நான் நிறைய அக்கவுண்ட்ஸ பார்த்துட்டேன். அவங்க போஸ்ட் பண்ணது எல்லாத்தையும் நான் பார்த்துட்டேன்.
Which is இதுக்கப்புறம் ரிப்போர்ட் பண்ணி அந்த வீடியோ எடுக்க சொல்லி ஒரு யூஸும் இல்லை அப்படின்னு தோணுது எனக்கு. I’m moving on. நான் வந்து இந்த விஷயத்துல இருந்து மூவ் ஆன் பண்றேன். Because I’m already taking care of this issue, silently.
நான் அதோட அப்டேட் எதுவுமே சோஷியல் மீடியால அப்டேட் பண்ணப் போறதில்லை. Because அது எனக்குப் பிடிக்கல. நான் என்னோட கிளாரிஃபிகேஷன் வீடியோ ஒன்னே ஒன்னு செய்யணும்னு நினைச்சேன், which I’ve already done. இதுதான் என்னோட கிளாரிஃபிகேஷன் வீடியோ. நான் போலீஸ் ரிப்போர்ட் பண்ணிட்டேன். We’re already working on it.
அண்ட் தேங்க்ஸ் ஃபார் எவ்ரிஒன் ஹூ actually reached out to me. நான் இன்னைக்கு வரைக்கும் நிறைய பேருக்கு மெசேஜ் ரிப்ளை பண்ணல. சாரி. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், நான் ரிப்ளை பண்றப்பவே என்னோட என்னோட மென்ட்லி நான் டிப்ரஸ்ட் ஆகுறேன்.
ஃபர்ஸ்ட் நான் ஜோக்கா, ரொம்ப பெரிய ஜோக்கா எடுத்துக்கிட்டேன். நான் எப்படி சொல்றது, என்னடா இது அப்படின்ற எடுத்துக்கிட்டேன். பட், அது சீரியஸாக, சீரியஸாக, சீரியஸாக எனக்கு எப்படித் தோணுச்சின்னா, இதெல்லாம் ஒரு விஷயமா? இதெல்லாம் ஒரு முக்கியமான இம்பார்ட்டன்ட்டான ஒரு நியூஸா? அப்படின்ற ஒரு தாட் எனக்கு.
பட் தேங்க்ஸ், நிறைய பேர் வந்து கிளாரிஃபை வீடியோ போட்டிருந்தீங்க. லைக், இல்ல, இது வந்து வேற ஆள், அந்த மினிஸ்டர் கிடையாது அப்படின்னு. அண்ட் let me tell you something, the relevant team already aware of this situation and they have reach out to me. And they are already working on this.
நானும் மலேசியன் போலீஸ் மலேசியன் போலீஸ்ட்ட ரிப்போர்ட் பண்ணி இந்த வேலையை இதோட நெசசரி ஆக்ஷன்ஸ் எடுத்துட்டு இருக்கேன். நான் ஏன் மலேசியன் போலீஸ் ரிப்போர்ட் அப்படின்னு சொல்றேன்னா, இந்த வீடியோ வந்து MOSTLY இந்தியாவிலதான் வைரலா ஆச்சு.
சோ, அதனாலதான் நான் வந்து, நான் சொன்னேன், I’m a Malaysian. சோ, ப்ளீஸ் அந்த வீடியோவை ஷேர் பண்றதை, நான் இன்னும் நிறைய பேர் ஸ்டில் ஷேர் பண்றதா இருக்கீங்க. ஸ்டில் நிறைய அக்கவுண்ட் அந்த வீடியோவை கிரியேட் பண்ணி எனக்கு அனுப்பிச்சிட்டாதான் இருக்கீங்க.
நான் அத நான் I’m not gonna take it to myself. அவ்வளவுதான் நினைக்கிறேன். என்னோட என்னோட எண்ட்ல இருந்து கிளாரிஃபிகேஷன் வீடியோ. இதுக்கப்புறம் நான் கிளாரிஃபிகேஷன் வீடியோ செய்ய மாட்டேன்னு நினைக்கிறேன். தட்ஸ் இட். தேங்க்யூ. இவ்வாறு வினூஷா கூறியுள்ளார்.
