முதல்வர் விஜயின் தாயார் ஷோபா பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் பி.டி ரமேஷ் குருக்கள் நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜயின் தாயாரும் பின்னணி பாடகியுமான ஷோபா சந்திரசேகர் இன்று தனது 78 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
முதல்வர் விஜய் மட்டுமின்றி அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் கவனம் பெறுகின்றன.
அந்த வகையில் விஜய் முதல்வரான பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் ஷோபா சந்திரசேகரின் பிறந்த நாளும் கவனம் பெற்றது.
முதல்வர் விஜய் தனது தாயாருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சென்றார்.

தற்போது வரை அவரது தாயாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் போனில் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றும் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பில் பிடி ரமேஷ் குருக்கள் ஷோபா சந்திரசேகரை நேரில் சந்தித்து மாலை அணிவித்து, பிரசாதங்கள், அருணாச்சலேஸ்வரர் சாமி படம் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து கூறினார்.
இதை ஷோபா தனக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்டாக பார்க்கிறாராம்.
