தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
வில்லிவாக்கம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

வில்லிவாக்கம் தொகுதி இதுவும் ஒரு ஸ்டார் தொகுதிதான். திமுக வேட்பாளராக மோகன் கார்த்திக் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் களத்தில் பிரசாரம் செய்தார்கள்.
2021 தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றியழகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகரை 37,237 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2026ல் அதிமுக வேட்பாளராக விஜயகுமார், தவெக வேட்பாளராக ஆதவ் அர்ஜூனா களம் காண்கிறார்கள்.
நாதக சார்பில் ரோசினி போட்டியிடுகிறார்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி – 41%
அதிமுக கூட்டணி- 24%
தவெக- 26%
நாதக- 6% வாக்குகள் பெறும்
இங்கு திமுக முன்னிலை வகிக்கிறது. கார்த்தி மோகன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
