Tamil Nadu Election Results 2026 : வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி – விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

Published On:

| By Pandeeswari Gurusamy

SAC

தவெகவின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜய்யின் தவெக தற்போதைய சூழலில் 109 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT

தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என் மகனுக்கு எனது வாழ்த்துகள்.

ADVERTISEMENT

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கை விஜயிடம் இருந்தது. தவெக 100 சதவீதம் வெற்றி பெறும் என 100 சதவீதம் விஜய் நம்பினார். அந்த அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன்.

ஒரு தலைவராக, கூட்டணி இல்லாமல் சொந்தக் காலில் நிற்பேன் என்றது அவரது துணிச்சல். கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது. இது விஜய்க்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்கது” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share