தமிழக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 23) சட்டப்பேரையில் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல், அவரது தோல்வியை சுட்டி காட்டும் வகையில், குட்டி கதை ஒன்றை சொன்னார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விஜய் நடிகர் என்பதை மறந்து முதல்வராக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
விஜய் பேசுகையில், ஒரு ஊர்ல ஒரு பெரியவர், வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிட்டு இருந்தாராம். அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், ‘என்ன தேடுறீங்க?’ அப்படின்னு கேட்டானாம் அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், ‘அது ஒன்னும் இல்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க… உங்க அப்பாவைக் காணோம்?
இல்ல… எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா, சம்பந்தம் இல்லாத குட்டி கதை… இதெல்லாம் எங்களுக்கும் பேச தெரியும் அந்த கதையில பெரியவர் அப்படி கேட்டாராம், அதனால யாரும் இங்க டென்ஷன் ஆக வேண்டாம். அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல இந்த ஆட்டம் ஆயிடுச்சு, இன்னும் பேசு பேசு என்றால் நான் என்ன பண்றது?” என கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் – பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு – விவசாயிகள் பிரச்சினை – மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு – வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது
தமிழக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
