வெற்றி கொண்டாட்டத்தில் விஜய் குடும்பம்.. திருத்தணி முருகன் கோயிலில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK

தமிழகத்தில் 17 ஆவது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட தவெக தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளில் 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே விஜய் கட்சிக்கு தற்போதைய நிலவரப்படி 38 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

நடிகர் விஜய் போட்டியிடும் முதல் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ள நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து அவரது குடும்பத்தினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share