”உங்களின் அறிவுரைகளைப் பெறுவதில் பெருமிதம்” : சத்குருவுக்கு விஜய் நன்றி!

Published On:

| By Kavi

தமிழக முதல்வர் விஜய்க்கு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வாழ்த்து கூறிய நிலையில்,  இதற்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 108 இடங்களில் வெற்றி பெற்று சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். 

ADVERTISEMENT

நாளை  பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

இந்தநிலையில்  முதல்வராக  பொறுப்பேற்றுள்ள  முதல்வர் விஜய்க்கு சத்குரு வாழ்த்து கூறியுள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து வெளியிட்ட பதிவில்,  “தமிழகத்தின் முதலமைச்சர்  சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான மாநிலத்தின் குடிமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், வரவிருக்கும் நிர்வாகத்திற்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். 

இதற்கு விஜய்,  “தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி. தங்களின் மேலான அறிவுரைகளை பெறுவதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்” என நன்றி கூறியுள்ளார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share