திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் விஜய்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு சென்ற விஜய் கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல் பணிகளை தொடங்கியுள்ளார்.

இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினர்.
தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
